பஞ்ச பட்சி சாஸ்திரம், பஞ்ச பட்சிப் பாஷாணம் என்பவை பஞ்ச பட்சிகளைக் கொண்டு குறிசொல்லும் சாஸ்திரங்களாகும். இது பற்றி விளக்கும் நுால். காலத்தை அறிய பலவித விளக்கங்கள் தருவர் என்றாலும், பஞ்ச பட்சிகளின் ஊண், நடை, அரசு, துாக்கம், மரணம் என்ற தொழில்களை அறிந்து உரிய நேரத்தில் செயல்பட்டால், எடுத்த காரியத்தை இனிதே முடிக்கலாம் என ஆய்ந்துரைக்கிறது.
பஞ்ச பட்சிகள் என்பவை வல்லுாறு, ஆந்தை, கோழி, காகம், மயில். அவை செய்யும் தொழில், உரிய பலாபலன்களை பேசுகிறது. அவரவருக்கு உரிய பட்சி பற்றியும் தெள்ளத்தெளிய விளக்குகிறது.
பஞ்ச பட்சி சாஸ்திரம், மந்திர தந்திர மாயாசக்திகளை உபதேசிப்பது என்றாலும், அவை தற்காலத்திற்கு அவசியமில்லை என்பதால், நன்மை தரும் முக்கிய கருத்துக்கள் மட்டுமே விளக்கப்பட்டுள்ளன. வாசகர்களுக்கு புதிய சிந்தனையையும், உள்ளக்கிளர்ச்சியையும் உண்டாக்கும் நுால்.
– முனைவர் இரா.பன்னிருகை வடிவேலன்