சிறுவர்களுக்கு நல்லறிவு புகட்டும் வகையில் எழுதப்பட்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். மொத்தம் 10 கதைகள் உள்ளன. முதல் கதை ‘டைனோசரும் புல்டோசரும்’ என்ற தலைப்பில் அமைந்தது. இது, அற்புதமான கற்பனையில் சூழலை சொல்கிறது. வித்தியாசமாக அமைந்துள்ளது.
அடுத்து, கம்பளி பூச்சியின் தவம், அழிப்பான், கரசடி மேகம், வாலைத் தேடிய பல்லி, மினியின் மினி சுற்றுலா, ஓணான் ஏன் தலையாட்டுகிறது, குழல் விளக்கும், மின்விசிறியும், பொம்மை, காக்காப் பள்ளிக்கூடம் என்ற தலைப்புகளில் கதைகள் உள்ளன.
கற்பனை நயத்துடன் கருத்தை சொல்கின்றன. சிறுவர் படிக்கும் வகையில் எளிய மொழி நடையில் உள்ளது. கற்பனையை துாண்டும் வகையில், உற்சாகமூட்டும் படங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அவை கதைகளுக்கு பொருத்தமாக அமைந்துள்ளன. நவீன பாணியில் சிறுவர்களுக்கு அறம் சொல்லும் இனிய நுால்.
– ராம்