ஏகம்பதிப்பகம்,அஞ்சல் பெட்டி எண்:2964, 3,பிள்ளையார் கோயில்தெரு,2 ம் சந்து, முதல் மாடி,திருவல்லிக்கேணி, சென்னை-600 005.
தமிழ் உரைநடை முறை கெட்டு,நெறி பிறழ்ந்து,சிதைந்து கொண்டிருக்கிறது.மிகக் குறைந்த காலத்தில் சிதைந்த கலப்படப் புது மொழியாக அது மாறிவிடுமோ எனும் அச்சம் எமக்கு ஏற்பட்டு அதனால் யாம் இப்பொருள் குறித்த நூல்கள் பலவற்றை எழுதி வெளியிடுகிறோம்.கூட்டங்களிலும் தொலைக்காட்சி போன்றவற்றிலும் எமது இப்பணி நடைபெறுகிறது. அவற்றின் தொடர்ச்சியாகத் தமிழ் அன்பர்கள் உதவியோடு தமிழைத் தமிழாக்குவோம் எனும் இயக்கத்தைத் தொடங்கியுள்ளோம்.