தமிழ் மண்ணில், தமிழ்மொழிக்கு முதன்மை வேண்டிக் குமரி முதல் சென்னை வரை 50 நாட்கள் நடைபயணமாக வந்த வரலாற்றுப் பதிவே இந்த நுால். தமிழ் மொழிக்குரிய நிலைப்பாடு தாழ்ந்து வருவது கண்டு மனம் வருந்துவதே முதன்மைப்பொருளாக உள்ளது. தமிழா ஒன்று சேர்... தமிழால் ஒன்றுசேர்... தமிழுக்காக ஒன்று சேர்... என்ற கூற்றுக்கேற்ப அமைந்துள்ளது.
‘ஹிந்திமொழி ஆதிக்கம் இல்லாமல் தானெதிர்த்தோம். அந்த ஆதிக்கம்போல் ஆங்கில ஆதிக்கம் செந்தமிழ்நாட்டில் திருட்டுக் களவாக வந்த ஆதிக்கம் ஹிந்தியுடன் சேர்ந்தெதிர்ப்போம்!’ என, இளைய தலைமுறைக்குத் தமிழ் மொழியின் இடத்தைஉணர்த்தும் வண்ணம் வெண்பா வடிவில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. தமிழின் மீதான உணர்வை ஓங்கச்செய்யும் நுால்.
– முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்