பிற மொழி சொற்களின் கலப்பு இன்றி தமிழ் மொழியை இனிமையாக பேசுவதை வலியுறுத்தும் கட்டுரைகளின் தொகுப்பு நுால். மொத்தம், 44 சிறிய கட்டுரைகளில் அந்த மையக் கருத்து கூறப்பட்டுள்ளது.
முதலில் காந்தியடிகள் வலியுறுத்திய தமிழ் உணர்வு என்ற தலைப்பில் அமைந்த கட்டுரை உள்ளது. தென் ஆப்ரிக்காவில் வசித்த தமிழர்கள், தமிழை விட்டு விலகிச் சென்ற போது, தமிழ் உணர்வை வலியுறுத்தியுள்ளார் காந்தி. இந்த அரிய செய்தியை மையமாக கொண்டு, எழுச்சி ஏற்படுத்தும் வகையில் கட்டுரை அமைக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரை அன்றாடம் பயன்படுத்தும் சொற்களில் உள்ள மொழிக் கலப்பை சுட்டிக்காட்டி, அவற்றுக்கு உரிய தமிழ் சொற்கள் தரப்பட்டுள்ளன. இது போன்று செயல்முறையாக உதவும் தகவல்கள் பல உள்ளன. மொழி மீதான தீவிர ஈடுபாட்டில் முறையாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட நுால்.
– ஒளி