புகழ்பெற்ற ஆங்கில நாவலாசிரியர் தாமஸ் ஹார்டி எழுதிய முக்கிய நாவல்களில் ஒன்று. எளிய நடையில் விறுவிறுப்பு குன்றாமல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அழகில் சிறந்த பெண்ணை சுற்றியே கதை பின்னப்பட்டுள்ளது. அவளை மூன்று பேர் காதலிக்கின்றனர். காதலை வெவ்வேறு சந்தர்ப்பங்களில் சொல்கின்றனர்.
அவளை மிகவும் நேசிக்கும் ஏழையை புறக்கணிக்கிறாள்; மற்றொருவனை மணந்து வாழ்கிறாள். அவன் கடலில் மூழ்கி இறந்ததாக செய்தி வருகிறது. அந்த நிலையில் அவளுக்கு பாதுகாப்பு தருகிறான் ஏழை. நேர்மை, அடக்கத்துடன் வாழும் குணக்குன்றான அவன் இறுதி வரை கடமையில் மூழ்கியிருக்கிறான். தான் காதலிப்பவனை விட, அவளை காதலிப்பவனை மணப்பதே சிறந்தது என்ற உண்மையை உணர்கிறாள் பெண். இப்படி சுவாரசியமாக உள்ளது கதை.
– ராம.குருநாதன்