நாட்டு நடப்பு, சமூக நிகழ்வுகள், மனித வாழ்க்கை சார்ந்து, 31 தலைப்புகளை விவரிக்கும் கட்டுரைகளின் தொகுப்பு நுால். ‘தவளை நினைவுகள்’ முதல், ‘கோடி கோடி இன்பமுண்டு’ என, ஒவ்வொரு தலைப்பும் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என சிந்திக்க வைக்கின்றன.
காணாமல் போன திண்ணை பழக்கம், சமூக வலைதளங்களை பயன்படுத்தி தொலைதுாரங்களை இணைக்கும் உரையாடல், மன இறுக்கம் என வளர்ச்சி பாதையால் நிகழ்ந்து வரும் பெரும் பாதிப்புகளை அலசுகிறது.
மீனவர் வாழ்க்கை, கடலுடனான உறவை ஆழமாக சொல்கிறது. உலகை ஆட்டிப் படைக்கும் வைரஸ் நோய் தொற்று பற்றியும் கூறியுள்ளது. சுகமான வாழ்வுக்கு நாட்டு வைத்தியம், கருவியில்லா உடல் பரிசோதனை, நாடி பார்த்து நோயை கண்டறியும் உத்திகள் பற்றி விளக்குகிறது.கட்டுரை தொகுப்பாக இருந்தாலும், மொழி நடை கவிதை வாசிப்பதை போல் உள்ளது.
– டி.எஸ்.ராயன்