இறைவன் படைப்பில் அரிய நுட்பங்களும், உண்மைகளும் அடங்கி உள்ளதாக எடுத்துக் கூறியுள்ள நுால். படித்தால் முழு ஆன்மிக திருப்தி அடையலாம். விஞ்ஞானக் கருத்துக்களும், தத்துவ உண்மைகளும் தெளிவாக எடுத்துக்காட்டி விளக்கப்பட்டுள்ளன.
வானியல், புவியியல், பொருளியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல், பரிணாமவியல், அறிவியல், ஆன்மிகவியல் அடங்கிய படைப்பியலை நல்ல தமிழ் நடையில் இலக்கியச் சுவையுடன் விளக்கியுள்ளது. இதை ஆன்மிக நுாலாகவும், அறிவியல் நுாலாகவும், ஆராய்ச்சி நுாலாகவும் கருதலாம். தமிழ் மக்கள், தமிழ் அறிஞர்கள், புலவர்கள், தமிழ் ஆர்வலர்கள், ஆன்மிகவாதிகள், ஆன்மிக அறிஞர்கள் படித்து பயன் பெறலாம்.
– வி.விஷ்வா