‘அன்பே சிவம், பசி என்னும் பாவி, மனம் செய்யும் மாயம், உன்னை நீ அறி, சொல்லறச் சும்மா இரு, மரணம் முடிவன்று, வாழ்க்கை என்னும் பிரவாகம்’ ஆகிய தலைப்புகளில் பழந்தமிழர் வாழ்வியலைப் படம் பிடித்துக் காட்டும் நுால்.
அறிவால், ஆற்றலால், ஆய்வால் உருவாக்க முடியாத ஒன்று தான் இயற்கை. கடவுள் எப்படி உருவானான். பிறப்பும் இறப்பும், பிறப்பிற்கு முன்னும் இறப்பிற்கு பின்னும் என்ன நிலை போன்ற சித்தமரபு தத்துவங்களையும், இறைவன் மூலமாக இவ்வுலகம் தோன்றியது என்னும் பிருஹதாரண்யக உபநிஷதங்களையும் தொட்டுச் செல்கிறது.
இளைஞர்களுக்கு தேவையான அன்பே சிவம், வாழ்க்கை ஒழுக்கம், இறைவன் தொடர்பான விளக்கங்கள், சித்தி, யோகம், பிராணயாமம், தலைசிறந்த வாழ்வியலை அடையும் வழிமுறைகள், சரியை, கிரியை, யோகம், ஞானம், சீடன், தவம், துறவு, திருநீரின் மகிமை, அடியவர்களின் பெருமை, ஆன்மாவின் இலக்கணம், தத்துவமசி, பதி பசு பாசம், பக்தி, சூக்கும பஞ்சாட்சரம், சிவதரிசனம் போன்ற வாழ்வியலைக் கொண்டமைந்துள்ள நுால்.
– முனைவர் பன்னிருகைவடிவேலன்