நகர்ப்புற உள்ளாட்சி இயக்கத்துக்கு அடிப்படையாக அமைந்த சட்ட விதிகள், அழகு தமிழில் நுால் வடிவம் பெற்றுள்ளது. முழுமை ஆவணமாக தரப்பட்டு உள்ளது.
இரண்டு பாகங்களை கொண்டுள்ளது இந்த நுால். முதல் பாகத்தில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் நகராட்சி அமைப்பு விதிகளை தெளிவாக எடுத்துக்கூறியுள்ளது. நடைமுறைப்படுத்த வேண்டியவற்றை தெளிவாக தந்துள்ளது.
சட்டத்தில் ஷரத்துக்கள் அப்படியே எளிய தமிழில் தரப்பட்டுள்ளதால், முறையாக பயன்படுத்த ஏற்றது. சட்ட விதிகள் பொருத்தமான துணைத் தலைப்புகளுடன் விளக்கமாக தரப்பட்டுள்ளன.
பேரூராட்சிகள் தொடர்பாக சமீபத்தில் அரசு பிறப்பித்துள்ள சட்ட விதிகளும் உள்ளன. அதிகார அமைப்பின் செயல்பாடு, இயக்குபவர்களின் அதிகாரம், அலுவலர்களின் அதிகார வரம்பு, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பணி மற்றும் வரம்பு, செயல்பாடு போன்ற விபரங்களை தெளிவாக தருகிறது. நகராட்சி மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தில் பிரதிநிதித்துவம் பெறுவோர் சிறப்பாக இயங்க வழி செய்யும். மக்களாட்சியை மேலும் நெகிழ்வடைய செய்யும் நுால்.
– மலர்