குழந்தைக் கவிஞராக போற்றப்படும் அழ.வள்ளியப்பா நுாற்றாண்டையொட்டி அவரது சிறப்புகளை, 100 தலைப்புகளில் தொகுத்து வழங்கும் நுால். அழ.வள்ளியப்பாவின் வாழ்க்கை வரலாற்று கட்டுரைகளின் தொகுப்பாக அமைந்துள்ளது. எளிய தமிழ் நடையில் உள்ளது. கவிஞர் பிறந்த ஊர், பிறந்த தேதி, சுவீகாரம் சென்றது, உடன் பிறந்தோர் என்று தகவல்களை நிரல்பட விவரிக்கிறது.
‘நதிகள் தந்த பெருமை’ என்ற தலைப்பில் தென்னிந்திய நதிகளைப் பற்றி அவர் எழுதியதை தேசிய புத்தக டிரஸ்ட் நிறுவனம் 14 இந்திய மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட்டது பற்றிய குறிப்பு உள்ளது.
குழந்தைச் சண்டை என்ற ஆங்கில கதையை ஒட்டிய குழந்தைக் கதைப்பாடல், குழந்தைகள் சண்டை போட்டாலும் சமரசம் ஆகி விடுவர் என்பதைக் குறிப்பிடுகிறது. பூனையும், எலியும் பேசிக்கொள்வது போன்ற கவிதை சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கிறது. வழிகாட்டியாக அமையும் நுால்.
– பேராசிரியர் இரா.நாராயணன்