இமயமலை போல் வாழ்வில் சிறந்து விளங்கும் எழுவரைப் பற்றி சுவைபட எழுதப்பட்டுள்ள நுால். பெருந்தலைவர் காமராஜர், மாமனிதர் கக்கன், அன்னை தெரசா, கல்கண்டு தமிழ்வாணன், இசையமைப்பாளர் இளையராஜா, கவிஞர் மு.மேத்தா, அன்புப் பாலம் கல்யாணசுந்தரனார் ஆகியோரின் வாழ்க்கை நிகழ்வுகளை நிரல்பட விவரிக்கிறது.
தொண்டு உள்ளத்தோடு அன்னை தெரசா, தொழு நோயாளிகளுக்கு செய்த உதவியையும், பசியால் வாடிய பச்சிளம் குழந்தைகளை ஆதரித்த செயலையும் விவரிக்கிறது. கல்கத்தாவில் ஆற்றிய பணி, தொழு நோயாளிகளுக்கு இல்லம் வாங்கியது, ஆசிரியப் பணி, நர்ஸ் பணி என்று தெரசா வாழ்வில் தொண்டு என்ற தாரக மந்திரமே, அன்னை மடியில் என்ற கட்டுரை எடுத்தியம்புகிறது.
இப்படி ஒவ்வொருவரின் தியாக செயல்பாடு, சமூக பங்களிப்பு பற்றி சுருக்கமாக எழுதப்பட்டுள்ளது. தகவல் களஞ்சியமாக விளங்கும் நுால்.
– பேராசிரியர் இரா.நாராயணன்