வசியப்படுத்துதல் மற்றும் மயக்க நிலைக்கு அழைத்துச் செல்லுதல் என சொல்லப்படும் கலைகள் குறித்து எழுதப்பட்டுள்ள நுால். கண்களை கண்கள் மூலம் வசப்படுத்துவது வசியம் என்று நினைத்துருந்தது தப்பு. அசைவே இல்லாத உற்று நோக்கும் கண்களால், எதிரியின் நெற்றிப் பொட்டில் பார்வையின் உஷ்ணத்தால் அடிமைப்படுத்துவது வசியக்கலை.
கண்களைப் பார்த்து விட்டால் வசப்படுத்தும் தன்மை போய்விடும். நெற்றிப்பொட்டில் இடைஞ்சல் இருந்தாலும் வசியப்படுத்த முடியாது. அதனால் தான், நெற்றியில் திலகம் உள்ள பெண்ணை வசப்படுத்த முடியாது என்று உரைக்கிறது. நகைச்சுவை கலந்த நடையழகால் கதையோட்டம் போல் படிக்க முடிகிறது.
– சீத்தலைச் சாத்தன்