ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவானது, ‘அவன் பெயர் அனிருத்’ என்ற நாவல். தமிழகத்தை உலுக்கிய சுனாமி பேரழிவின்போது நடைபெற்ற நிகழ்வுகளையும், அதனால் பாதிக்கப்பட்டவர்களின் மன வேதனையையும் பிரதிபலிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது. சுனாமியில் காணாமல் போன பலரில் 4 வயது சிறுவனும் ஒருவன். அவனை எங்கு தேடியும் கிடைக்கவில்லை என்பது அன்றைய செய்திகளில் ஒன்று.
அதை அடிப்படையாகக் கொண்டு, காணாமல் போன சிறுவனின் தந்தையாக தன்னைக் கருதி கற்பனையில் உருவானது தான் இந்த படைப்பு. காணாமல் போன சிறுவனின் பெற்றோரின் மனத் தவிப்பு, புத்திர சோகம், மகனைத் தேடுவதில் காட்டிய அக்கறை, அவன் மீண்டும் கிடைப்பான் என்ற நம்பிக்கையில் பல ஆண்டு காத்திருந்த பாசப்பிணைப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
ஒரு சிறுவனையும், சிறுமியையும் துப்பறிவாளர்களாக அறிமுகப்படுத்தி புதுமையும் கையாண்டிருக்கிறார்.
– இளங்கோவன்