ஊரக உள்ளாட்சியின் அதிகாரம், தலைவர்கள் உருவாக்கம், செயல்பாடு, திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது போன்ற வழிமுறைகளை விரிவாக அலசும் நுால்.
உள்ளாட்சி அமைப்புகள் தயாரிக்கும் திட்டத்திற்கு தான், எம்.எல்.ஏ., – எம்.பி., நிதி செல்ல வேண்டும்; சமத்துவத்தை நிலைநாட்ட, ஜாதி, மதம் பார்க்காத அதிகார பரவல் வேண்டும் என்கிறது.
உள்ளாட்சிகளை சுயமாகச் செயல்படவிடாத மத்திய, மாநில அரசுகளையும் சாடுகிறது. மாநில சுயாட்சிக்கு குரல் கொடுப்போர், உள்ளாட்சிக்கான அதிகாரத்தை விரும்பவில்லை என குறிப்பிடுகிறது. முப்பது தலைப்புகளில் மேம்பட்ட உள்ளாட்சி கட்டமைப்பை உருவாக்க அறிவுரைகள் உள்ளன. இதில், 58 கேள்விகள் கொண்ட பகுதி, உள்ளாட்சிகளை எடை போட்டு பதில் காண துாண்டுகிறது. மக்கள் பிரதிநிதிகள், சமூக செயல்பாட்டாளர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நுால்.
– டி.எஸ்.ராயன்