வாழ்வில் தடங்கல்களை சவாலுடன் எதிர்கொண்டு வெற்றிக்கு வழிகாட்டும் நுால். வாழ்க்கை அனுபவத்தை அடிப்படையாக கொண்டது. குறிப்பாக இளம் பெண்களுக்கு நற்சிந்தனை ஊட்டும் வகையில் உள்ளது.
முன்னேற்றத்தின் போது ஏற்படும் தடைகளை தகர்க்கும் வழிமுறைகள், 100 கட்டுரைகளில் சொல்லப்பட்டுள்ளது. முதல் கட்டுரை, ‘வாய்ப்புகளை தவறவிடக்கூடாது’ என்ற தலைப்பில் அமைந்துள்ளது. கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தும் வழிமுறைகளை தருகிறது.
சின்ன தலைப்புகளில் எளிய மொழி நடையில் வெல்லும் வழிமுறைகளை சொல்கிறது.
நேரடியாக பேசுவது போல் அமைந்துள்ளது. சமூக வழக்கம் என்ற பெயரில் முயற்சியில் முட்டுக்கட்டை விழும் போது, எதிர்கொள்வதற்கான மனநிலையை உருவாக்கி கொள்வது பற்றி தெளிவு தருகிறது. அனுபவ வழியில் கற்ற பாடத்தின் துணை கொண்டு விளக்குகிறது. முன்னேற துடிக்கும் பெண்களுக்கு, பாதையை செப்பனிட்டு நம்பிக்கையுடன் அழைத்து செல்லும் நுால்.
– மதி