வேலைக்குபோகும் பெண்களின் திருமணத்தில் பெற்றோர் அக்கறை காட்டாத சூழ்நிலையை முன் வைத்து எழுதப்பட்ட நாவல்.
வெளிநாட்டில் வாழ்ந்தாலும் அங்கேயே கூட்டி வந்து தங்கையிடம் பாசத்தைக் கொட்டும் அண்ணன் குடும்பம். வெளிநாட்டில் இருக்கும் தம்பி பணம் காய்ச்சி மரம் என நினைத்து தம்பி கல்யாணத்தை தள்ளிப் போடுகிறார் அக்கா.
அதையும் மீறி வெளிநாட்டில் நடக்கும் திருமணம், அதன் பின் விளைவு என்ற திருப்பங்களுடன் கதை நடக்கிறது. வளமான தமிழ் நடை. திருமண வயதில் பெண்ணை வைத்திருப்பவர்கள் படிக்க வேண்டிய நாவல்.
– சீத்தலைச் சாத்தன்