தன்னம்பிக்கை ஊட்டும் நுால்களையும், இஸ்லாமிய பெரியோர்களின் வாழ்க்கை வரலாற்றை பறைசாற்றும் கட்டுரைத் தொகுப்புகளையும், வாழ்வியல் வழிகாட்டும் புதினங்களையும் படைத்து, பன்னுாலாசிரியர் என்ற பெருமையை பெற்றவர் அப்துற் றஹீம்.
இவரது படைப்புகள் குறித்த ஆய்வரங்கத்தில், 40க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள், இஸ்லாமிய அறிஞர்கள், படைப்பாளர்கள் பங்கெடுத்து, கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். அவற்றை தொகுத்து உருவாக்கப்பட்டுள்ளது இந்த புத்தகம்.
தன் முனைப்பு உரை, இல்லறம், தமிழாய்வு, சாதனையாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள், தத்துவாசிரியர்கள், வழிகாட்டிகள் குறித்து மிக ஆழமாக, நுட்பமாக தகவல்கள் பதிவாகியுள்ளன.
– பெருந்துறையான்