லலிதாம்பிகை பண்டாசுரனை அழிக்க புறப்பட்ட போது, சக்தியையே வாராஹியாக்கினாள் என சக்தியின் அம்சத்தை நிறுவும் நுால். பிள்ளைகளின் துன்பத்தை தாய் நீக்குவது போல வாராஹி காக்கிறாள் என்று பெருமை பேசுகிறது. வறுமையை நீக்கும் வாராஹி, திருமணம் கைகூட, வேலைவாய்ப்பு பெற, கணவன் – மனைவி ஒற்றுமையை ஓங்க வைக்க, நல்ல வாழ்வு அமைய, நோய் நீக்கும் அம்பிகையின் சக்தி, கருணை மழை பொழிய என எட்டு வடிவங்களையும் விளக்குகிறது.
வாராஹி வழிபாடு தோன்றியது பற்றி முதல் கட்டுரை துவங்கி, கோ பூஜை செய்யுங்கள் என, 21 தலைப்புகளுடன் நிறைவெய்துகிறது. வாராஹியின் இருப்பிடம் பற்றி விரிவான விளக்கம் தருகிறது.
பசுவைப் பூஜித்து கோ தானம் செய்தால் என்னென்ன நன்மைகள் பெறலாம் என்றும் விளக்குகிறது. வாராஹி அம்மன் பற்றிய பெருமை, பராக்கிரமத்தை அறிந்து கொள்ள உதவும் நுால்.
– பேராசிரியர் இரா.நாராயணன்