வாக்கிய பஞ்சாங்கக் குறிப்புகளைக் கொண்டுள்ள நுால். பஞ்சாங்கம் பார்ப்பது எப்படி, சகாப்தம், கொல்லம் ஆண்டு, அகசு, அயனம், ருது, நட்சத்திரம், திதி, யோகம், கரணம், நாழிகை இருப்பு பற்றி முதலில் விளக்கப்பட்டுள்ளது. அறிய வேண்டிய ஆண்டுப் பலன்கள், திதி நிர்ணயம் என்ற சிரார்த்தவிதி, திதித்துவம், சூன்ய திதி, உபாகர்ம நிர்ணயம், ஏகாதசி நிர்ணயம் ஆகியவையும் விளக்கப்பட்டுள்ளன.
லக்கன அட்டவணைக்கான விளக்கப் பட்டியல், சந்திரா லக்கினம், கர்ப்போட்டம் நாள்கள் விபரம், கவுரிப் பஞ்சாங்கம், சுப முகூர்த்த நிர்ணயம், குரு கிரக கோள் சார துற்பலன், திருமணப் பொருத்த விளக்கங்கள் போன்றவையும் தெளிவாக உள்ளன.
முதல் 120 பக்கங்களில் மேற்கண்ட விபரங்களும், பின்னுள்ள, 120 பக்கங்களில், 2021 முதல் 2030ம் ஆண்டு வரையான பஞ்சாங்கக் குறிப்புகளும் இடம்பெற்று உள்ளன. ஜோதிடம் அறிய விரும்புவோருக்கு உதவும் நுால்.
–
டாக்டர் கலியன் சம்பத்து