மனித உடலில் ஆறு சக்கர மையங்கள் மற்றும் குண்டலினி பற்றி எழுதப்பட்டுள்ள நுால். ஆறு சக்கர மையங்கள் தனித்தனியாக விளக்கப்பட்டுள்ளது. திருமூலரின் சில யோக சிந்தனைகள் கூறப்பட்டுள்ளன. சத்துவம், ராஜஸம், தாமஸம் என்ற குணங்களை விளக்கி, உடம்பிலுள்ள நச்சுத்தன்மையை அகற்றவும் வழி சொல்கிறது.
உடல் சுத்தம் செய்யவும் தவுதி, பஸ்தி, நேதி, த்ராதகா, நவுலி, கபாலபதி என்ற முறைகளைக் கூறி, இவை சராசரி மனிதர்களுக்கு சாத்தியப்படாதவை என்கிறது. தியானத்தை ஒவ்வொரு சக்கரத்திலும் செய்வதை விளக்கியுள்ளது. சம நிலைக்கான சில ஆசனப் பயிற்சிகளையும் விளக்குகிறது. யோக மார்க்கத்தில் வெற்றி பெற வழிகள் கூறும் நுால். நல்வாழ்விற்கு உதவும்.
– டாக்டர் கலியன் சம்பத்து