இந்திய புண்ணிய தலங்களைப் பற்றி படைக்கப்பட்டுள்ள நுால். புண்ணிய தலங்களில் பின்பற்றப்படும் நடைமுறைகள் தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளன. புண்ணிய தலங்களின் கட்டட அமைப்பு, கட்டடத்தின் சிறப்பு, அவற்றில் சுவாமி சிலைகள் அமைக்கப்பட்டுள்ள விபரங்கள் உள்ளன.
புண்ணிய தலங்கள் அமைந்துள்ள துாரம், திறக்கப்படும் நேரம், பெருமை, முக்கிய திருவிழாக்கள் பற்றியும் கூறப்பட்டுள்ளது. கோதாவரி, கங்கை புண்ணிய நதிகள் பற்றியும், அவற்றில் நீராடி பாவங்களைப் போக்கும் முறை பற்றியும் வழிகாட்டப்பட்டுள்ளது. தேவையான இடங்களில் முக்கிய படங்கள் இணைக்கப்பட்டுள்ளன. நாட்டிலுள்ள முக்கிய புண்ணிய தலங்களை அறிய உதவும் நுால்.
– முகில் குமரன்