சிக்ஷா, வியாகரணம் எனப்படும் அறு வகை சாஸ்திரங்களில் ஜோதிட சாஸ்திரமும் ஒன்று என கிரகங்களின் செயல்பாட்டுடன் இணைத்து விளக்கும் நுால். ஆரியபட்டர், பஞ்சாங்கம் வெளியிட்ட விபரங்கள், கிரகங்களின் பூர்வீகம், பாவ புண்ணியப் பலன்கள், நவ கிரக வம்சாவளிப் பட்டியல், ராசி இல்லங்களுக்கு உருவம் இல்லை; திண்மையில்லை; ஈர்ப்பு சக்தியில்லை என்பது போன்ற விபரங்கள் விளக்கப்பட்டுள்ளன.
உலகிற்கு ஒளி தரும் சூரியன், நவ கிரக பரிபாலனத்தை விருப்பு வெறுப்பின்றி சம நோக்குடன் வழி நடத்துவதாகக் கூறுகிறது. சுக்கிரன், அங்காரகன், சனி, சூரியனுக்கு ஆகாதவர்களாக ஆனது குறித்து விளக்குகிறது.
உலகிற்கு அருகில் இருக்கும் சந்திரன், இந்திர யோக வாழ்வு தருவதையும் விளக்குகிறது. ஜோதிடக் கலையில் சேனாதிபதி போன்ற அங்காரகன் குறித்தும் விளக்கம் தருகிறது. புதன் கிரகம், சனி கிரகத்துடன் கூடியிருந்தால் ஜாதகருக்கு கெடுதலாகவே அமையும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கிரக கோச்சாரப் பலன்கள் குறித்தும் விளக்கப்பட்டுள்ளது. அருமையான ஜோதிட நுால்.
– டாக்டர் கலியன் சம்பத்து