சம கால அரசியலையும், அரசியல்வாதிகளின் நடவடிக்கையையும் விமர்சிக்கும் நாவல். நான்கு கதாபாத்திரங்கள் அருவமெடுத்து, அரசியல்வாதிகளின் செயலை கண்காணித்து, தங்களுக்குள் உரையாடுவதைப் போல் அமைக்கப்பட்டுள்ளது.
நாவலில் இடம் பெறும் காட்சிகள், வசனங்கள் நிகழ்கால அரசியலை நினைவுபடுத்துகின்றன. வேட்பாளர் தேர்வு, அதில் குறுக்கு விசாரணைகள், உறவுகளின் சிபாரிசு என விவரித்துள்ள விதம் தத்ரூபம்.
மறைக்கிறது, சம்பாதிப்பதை விட முக்கியமானது, நிதித் துறைக்கே படியளிக்கும் பொதுப்பணி மந்திரி, சின்னம்மாவுக்கு சேர வேண்டியதை சேர்த்திடணும், போலீஸ் மற்றும் உளவுத்துறையை மட்டும் முதல்வர் வைத்திருப்பதன் நோக்கம், கூட்டுறவு துறையின் பொருள் என விளக்கும் விதம் அருமை.
சொந்தக் கட்சிக்குள் நடக்கும் அரசியல், தேர்தல் களத்தில் நிகழும் நாடகங்கள், வார்த்தை ஜாலங்கள், எதிர்க்கட்சியை அமைதிப்படுத்தும் ஒப்பந்தம் என பலவாறாக விவரிக்கிறது. பக்கத்துக்குப் பக்கம் பகடியுடன் நகைச்சுவையால் நிரம்பியுள்ள நாவல்.
– சையத் அலி