பொருளாதார ரீதியாகவும், ஜாதிய கட்டமைப்பாலும் அழுத்தப்பட்ட மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். தெலுங்கு எழுத்தாளர் தும்மல ராமகிருஷ்ணாவின் படைப்புகளில் சிறந்தவற்றின் தமிழாக்கம்; க.மாரியப்பன் மொழிபெயர்த்துள்ளார்.
முப்பாட்டன் காலத்தில் இருந்து செய்து வரும் தொழிலை கலையாகவும், நேர்த்தியாகவும் செய்பவருக்கு, சிறிது நிலம் மனைவி வீட்டார் மூலம் கிடைக்கிறது. அதில் துாறல் விழும்போது வேளாண் பணியையும், மற்ற நாட்களில் சவரப் பணியையும் கவனித்து வந்தவருக்கு, நிலச்சுவான்தாருடன் பிணக்கு ஏற்படுகிறது. அதன் விளைவாக எடுத்த முடிவை சவரப்பெட்டி கதை அழகாக விவரிக்கிறது.
குழந்தைகளின் பார்வை வித்தியாசமானது, விசாலமானது என்பதை தாஜ்மஹால் கண்ணீர் கதை உரைக்கிறது.
– சையத் அலி