நடுத்தர வர்க்க குடும்பத்தின் ஆசாபாசம், இலக்கு, உறவுப் பேணல், தலைமுறை இடைவெளிச் சிக்கல், பிரச்னைகளை எதிர்கொள்ளும் பக்குவம், கல்வியின் மகத்துவம் போன்றவற்றை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால்.
விருந்தோம்பல் என்பது விதவிதமான உணவுகளில் இல்லை; விருந்தினரின் உடல்நிலையை உணர்ந்து சமைப்பதே என்பதை, ‘விருந்தோம்பல்’ கதையில் காணலாம். மருமகளின் நட்புக்கு மரியாதை அளிப்பது குறித்து, ‘உறவுகள்’ கதையிலும், மாமியார்களின் ஆதங்கம் அற்பமானது என்பதை, ‘ரெசிபி’ கதையிலும் சுருக்கமாகச் சொல்லப்பட்டுள்ளது.
அதேபோல், நடைபயிற்சி வேறு, வேலை வேறு என்பதை, ‘வேலை’ கதையிலும்; ஊருக்காக அடையாளத்தை மறைக்கக் கூடாது என்பதை, ‘ராசி’ கதையிலும் உணர்த்துகிறது. மிக எளிய நடையில் எழுதப்பட்டு உள்ளது.
– பெருந்துறையான்