ஆன்மாக்களோடு உரையாடியதாக பதிவு செய்யப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நுால். அன்னையர் போர்க்கொடி துாக்கி, ‘விநாயகா... முருகா... இன்று முதல் பூமியில் பிறக்கும் நாங்கள் பிரசவ வலியை அனுபவிக்க வேண்டும். அன்னையே ஏற்றுக்கொண்ட ஒரு வலியை நாங்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதற்கான வரம் தா’ எனக் கேட்டதால் முருகன் சாசனத்தை எழுதியதாக கூறப்பட்டுள்ளது.
அம்மை நோய் வந்த பிறகு தான் மருத்துவ தொழில் துவங்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. அதனால், உலகில் தோன்றிய முதல் நோய் அம்மை என கூறியுள்ளார். நாயுடன் பேசினால் குரைக்கும். சிங்கத்துடன் பேசினால் உருமும். மயிலிடம் போனால் ஆடும். ஆந்தையிடம் பேசினால் கத்தும். கழுகிடம் பேசினால் கொத்தும். வவ்வால் இடம் பேசினால் தொங்கும் என விவரிக்கும் நுால்.
– சீத்தலைச் சாத்தன்