சங்க இலக்கியத்தில் கூறப்பட்டுள்ள நில வகை, குடிகள், வழிபாடுகள் குறித்து, ஆய்வு நோக்கில் எழுதப்பட்டுள்ள நுால். இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பகுதியில், சங்க இலக்கியத்தில் நிலங்களும் குடிகளும் என தலைப்பில் உள்ளது. ஆரியர்களின் குடியேற்றம் பற்றியும் விளக்கப்பட்டுள்ளது.
நில வகை, மக்கள், குடும்ப முறை, விவசாயம், உணவு முறை, வாழ்க்கை முறை, தொழில், பறவைகள், ஓசைகள், கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட 44 தலைப்புகளில் தகவல்கள் உள்ளன. அனைத்தும் விளக்கம், தெளிவாக பதிவு செய்யப்பட்டு உள்ளன. சங்க இலக்கியப் பாடல்கள் சான்றாக அளிக்கப்பட்டுள்ளன.
இவற்றுக்கு தொடர்புள்ள படங்களையும் பதிவு செய்துள்ளது சிறப்பு. அக்காலத்தில் குழந்தைகளை பாதுகாப்பது, இனக்குழுவை கவனிப்பது போன்றவை தலையாய கடமையாக இருந்துள்ளன. தாய் வழிச் சமூகம் சிறப்பு பெற்றிருந்தது பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழர்களின் வாழ்க்கை முறை, பழக்க வழக்கங்களை அறிய உதவும் நுால்.
– முகில் குமரன்