திருக்குறளின் உலகப் பொதுத் தன்மையை எடுத்துரைக்கும் வகையில் எழுதப்பட்ட கட்டுரைகளைக் கொண்ட தொகுப்பு நுால்.
ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டதன் நோக்கத்தை திருக்குறள் உணர்த்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. உலகமயமாக்கல் தொடர்பான சிந்தனைகளைத் திருக்குறள் கொண்டிருப்பதாக தெளிவுபடுத்துகிறது.
திருக்குறளின் உலக இலக்கியத் தன்மையையும், உலக மக்களுக்கு வழிகாட்டும் நுாலாக அமைந்துள்ளது என்பதையும் தெளிவுபடுத்துகிறது. அமைதியாக வாழ்வதற்கான வழிமுறையுள்ள நீதியை எடுத்துரைப்பதாகவும் திருக்குறள் விளங்கும் சிறப்பைத் தெளிவாக எடுத்துரைக்கிறது.
எளிமையான மொழிநடையில் ஆய்வியல் உண்மைகளை எடுத்துக் கூறுகிறது. ஆய்வாளர்களையும், அறிஞர்களையும், பாமர மக்களையும் கவரும் வகையில் அமைந்துள்ளது.
– முகிலை ராசபாண்டியன்