இந்திய பறவையியல் நிபுணர் மறைந்த சலீம் அலி பற்றி எழுதப்பட்டுள்ள புத்தகம். அவரது வாழ்க்கை வரலாற்றை அடியொற்றி எழுதப்பட்டுள்ளது.
மொத்தம் 27 சிறு அத்தியாயங்களில் அமைந்துள்ளது. முதலில் அவரது வாழ்க்கையின் முக்கிய பணியான பறவைகள் தேடல் பற்றி விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து, அவருக்கு பறவைகள் மீது ஏற்பட்ட ஆர்வம், அதை வளர்த்த விதம், காடுகளில் பறவைகள் பற்றிய ஆய்வுப்பணி என்று, வாழ்க்கை நிகழ்வுகளை நிரல்படுத்தி சுருக்கமாக தருகிறது.
இந்தியாவில் பறவைகளை ஆய்வு செய்து, அவற்றை பாதுகாக்கும் பணிகள் செய்தவரின் உன்னத வாழ்க்கையை காட்டும் நுால்.
– ராம்