பாடலாசிரியர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், பாவேந்தர் பாரதிதாசன், அப்துல் றஹீம், வீராங்கனைகள் ஜானகி தேவர், கேப்டன் லட்சுமி, எழுத்தாளர் ஜெயகாந்தன், இந்திய கம்யூனிஸ்ட் தா.பாண்டியன், ஆர்.நல்லகண்ணு பற்றிய கட்டுரை நுால். ஆளுமைகளைப் பற்றி அரிய தகவல்கள் வெளிவந்துள்ளன.
பட்டுப் புடவைக்காக, கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவாவின் மனைவி ஆவேசமாகப் பேசியதை கேட்க நேர்ந்ததும், அடுத்த நாளே புடவை வாங்கிப் பரிசளித்ததும் சுவையான செய்தியாக பதிவாகி உள்ளது. பாவேந்தருக்கும், அவரது மகன் மன்னர்மன்னருக்கும் இடையே இருந்த முரண்பாடு, பாவேந்தரின் அரசியல் நிலைப்பாடு போன்ற தகவல்கள் சுவாரசியமானவை.
பாரதியின் அச்சமில்லை அச்சமில்லை என்ற பாடல், நேதாஜியிடம் ஏற்படுத்திய எழுச்சி பற்றி நேதாஜிப் படையில் பணியாற்றிய ஜானகி தேவர் வழி அறியக் கிடைக்கிறது. கம்யூனிசம், முதலாளித்துவம், காந்தியம் இவற்றிற்கான விளக்கத்தையும், பாரதியிடம் கொண்டிருந்த அபார பற்றையும் ஜெயகாந்தன் சொல்லியுள்ளார்.
மாமனார் குறித்து எழுதிய நல்லகண்ணுவின் கவிதை, அவரது தமிழார்வம் என அரிய செய்திகளை தரும் நேர்காணல் நுால்.
– ராம.குருநாதன்