புரிதலுடன் விட்டுக் கொடுத்து உதவி செய்து வாழ்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கும் கட்டுரைகளின் தொகுப்பு நுால். மனித குல மேம்பாட்டுச் சிந்தனைகள் விதைக்கப்பட்டுள்ளன. குடிப் பழக்கம், மனித நிலையிலிருந்து கீழே தள்ளிவிடுகிறது. நீரில் மூழ்கியவனை விளக்கில் தேட முடியாததைப் போல் குடிப்பழக்கம் உள்ளவனை மீட்பது முடியாது. அவனால் மட்டுமே தன்னை மீட்டுக் கொள்ள முடியும் என்னும் உண்மையை 100வது கட்டுரை எடுத்துரைக்கிறது.
எல்லாக் கட்டுரைகளும் ஏதோ ஒரு வகையில் யாரோ ஒருவருக்குப் பயன் தரும் வகையில் அமைந்துள்ளன. உதவிக் கரம் நீட்டுதல், உறவைப் பலப்படுத்துதல் என எண்ணற்ற சிந்தனைகளின் இருப்பிடமாக உள்ளன.
– முகிலை ராசபாண்டியன்