மனிதனை தரம் உயர்த்தும் வழிபாடு வகைகளையும், சிறப்பையும் விரிவாகப் பேசும் நுால். பிரம்ம வழிபாடு மற்றும் அதன் வகைகள், காளி வழிபாடு வரலாறு, சித்தர்களின் மருத்துவம், வழிபாடு, ஆன்மிகம், நவ ரத்தினங்கள் மூலம் நவகிரகங்களின் தோஷ பரிகாரங்கள், ஜோதிடமும் விஞ்ஞானமும், அகத்தியர் மாந்திரீக காவியம் ஆகிய தலைப்புகளில் விரிவாக விளக்குகிறது.
சித்த மருத்துவம், ஜோதிடம், வழிபாடு பற்றி எட்டு தலைப்புகளில் விளக்கம் தரப்பட்டுள்ளது. சரியை, கிரியை யோகம், ஞானம் என்பனவற்றை விளக்கி வழிபடும் முறையைக் கூறுகிறது.
சரியை என்பது தொண்டு, கிரியை என்பது வழிபாடு, யோகம் என்பது மனதை ஒன்ற வைக்கும் பயிற்சி, ஞானம் என்பது மன ஒழுக்கம். யோகம், யாகம் செய்வதால் உண்டாகும் நன்மை, தீ வளர்த்து யாகம் செய்வதால் ஏற்படும் பலன்கள் தரப்பட்டுள்ளன.
பஞ்ச பூத வழிபாடுகளும் அதன் சிறப்புகளும் தரப்பட்டுள்ளன. வீரத்தின் வெற்றிக் கடவுளாக சுட்டப்படுகிறாள் காளி. தொல்காப்பியம், சிலப்பதிகாரம் போன்றவற்றில் சுட்டப்பெறும் காளி பற்றியும் விளக்கம் தந்துள்ளது. ஆன்மிக அன்பர்கள் படிக்க வேண்டிய நுால்.
– பேராசிரியர் இரா.நாராயணன்