முல்லைப் பெரியாறு அணை திட்டத்தால் தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களுக்கு நீர் வழங்கி புகழ்பெற்ற பொறியாளர் பென்னிகுவிக் பற்றிய தகவல் தரும் நுால். நீர் மேலாண்மையை மையப் படுத்தியது. பெரியாறு அணையைக் கட்டியதால் தேனி மாவட்ட மக்கள், பென்னிகுவிக்கை தெய்வமாகப் போற்றுகின்றனர். முல்லைப் பெரியாறு திட்டம், சேதுபதி ஆட்சி காலத்தில் பென்னிகுவிக்குக்கு முன் வகுத்திருந்தது பற்றிய தகவலும் தரப்பட்டுள்ளது.
அப்போதைய சேதுபதி மன்னர் – ஆங்கிலேயர் இடையே மோதலால் அந்த திட்டம் முடங்கியிருந்தது. பின், ஆங்கிலேய ஆட்சியாளரால் முன்னெடுக்கப்பட்டது. நீரின்றி அமையாது உலகு என்ற மையக்கருத்துடன் பென்னிகுவிக் வாழ்க்கை வரலாறும் உள்ளது. நதிநீர்ப் பிரச்னையை வரலாற்று அடிப்படையில் எடுத்துச்சொல்லும் நுால்.
– ராம.குருநாதன்