சேவையால் இந்தியாவுக்கும் பெருமை சேர்த்த அன்னை தெரசாவின் வாழ்வில் நடந்த சுவாரசிய நிகழ்வுகளை கூறும் நுால். உதவிட யாருமில்லாத தொழு நோயாளிகளுக்கு ஆதரவுக்கரம் நீட்டியவர். மருந்தகத்தின் அவசியத்தை உணர்த்தி, ‘நிர்மல் ஹிருதய்’ அமைப்பு உருவாக காரணமான எலி கடித்த பெண் குறித்து அலசுகிறது.
இஸ்லாமியர்கள் செய்த உதவி, மனம் மாறிய கோவில் பூசாரிகள், மதம் கடந்து மனிதத்தை உணர்த்தியதை வெளிப்படுத்துகிறது. தெரசாவால் புதுவாழ்வு பெற்ற வியாபாரி, நோபல் பரிசு விழா செலவை கேள்விப்பட்டு வருந்திய தருணம் என நெகிழ வைக்கிறார்.
பல சந்தர்ப்பத்தில், பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மனம் உருகும் வகையில் பதில் அளித்துள்ளார். அன்னை தெரசா குறித்து தெரிந்து கொள்ள விரும்புகிறவர்கள் வாசிக்க வேண்டிய நுால்.
– -டி.எஸ்.ராயன்