ஒரு மொழியை மாநிலங்கள் மீது திணிக்க விரும்பினால், அது போராட்டக்களமாக மாறும் என்ற உண்மை நிலையை உணர்த்திய தியாகராசரின் வாழ்க்கை வரலாற்று நுால்.
தியாகராசரின் தந்தை பெயர் முத்துக்கருப்பன். அவரது தந்தை பெயர் கருப்பன் செட்டியார். இந்த இரண்டு பேரிலும் உள்ள முதல் பகுதிகளை இணைத்து அமைந்த பெயரே கருமுத்து தியாகராசர்.
மதுரையில் மீனாட்சி ஆலையை உருவாக்கி பெரும்புகழ் பெற்ற தியாகராசர் இளமையிலேயே தந்தையை இழந்து, தமையன் அரவணைப்பில் வளர்ந்தவர் போன்ற செய்திகளை அழகாக எடுத்துரைக்கிறது.
ஒரு தலைப்பை அரைப் பக்கத்திற்கு உள்ளாக அடக்கி, தியாகராசர் தொடர்பான எல்லாச் செய்திகளையும் ஒரே இடத்தில் தருகிறது. தியாகராசர் பற்றிய தகவல் களஞ்சியம்.
–
முகிலை ராசபாண்டியன்