ஆசியாவின் மையப் பகுதியான மங்கோலியாவில் நாடோடி இனக்குழு தலைவரின் மகனாக பிறந்த செங்கிஸ்கானின் சாகச வாழ்வை படம் பிடிக்கும் நுால். பழங்குடி இனங்களை இணைத்து, வலிமையான படையை உருவாக்கி வெற்றி, தோல்வியை சமமாக கண்டது பற்றி விவரித்துள்ளது. பெரும் நிலப்பரப்பை மங்கோலிய அரசு ஆண்டதை போல், வேறு எந்த இனமும் ஆளவில்லை என்கிறது.
பல ஆயிரம் பேரை கொன்று குவித்த கொடுங்கோலன், அரசியல் மற்றும் இன அடையாளத்தின் தோற்றம் என, இரு பார்வை சொல்லப்பட்டு உள்ளது. செங்கிஸ்கான் மரணம், கல்லறை மர்மம், அவரின் ரகசியம், குணாதிசயம், கருப்பு சீனா மீது படையெடுப்பு, மத நம்பிக்கை, ஹிட்லரின் முன்னோடியா? நிர்வாகத் திறன் போன்ற 29 தலைப்புகளில் விரிகிறது.
பத்து வயதில் தன் சகோதரனை கொலை செய்தவர் என்ற பழி, வாழ்நாள் முழுதும் நினைவூட்டலாக இருந்துள்ளது. இவரது கல்லறை யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காக, வாகனத்தில் ஏற்றிச் சென்ற அவரது சடலத்தை பார்த்த அனைத்து கிராம மக்களையும் கொன்று குவித்துள்ளனர். செங்கிஸ்கானின் சர்ச்சை மிகுந்த வரலாற்றை விவரிக்கும் நுால்.
–
டி.எஸ்.ராயன்