இந்திய சுதந்திர வரலாற்றில், முதல் பிரதமர் நேருவின் வாழ்க்கையில் நடந்த சுவையான நிகழ்வுகளை வழங்கும் நுால். ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பின், சுதந்திர போராட்டத்தில் தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர். ஒரே முறை, 14 ஆண்டுகள் சிறையில் இருந்தவர். எங்கு சென்றாலும் 50 புத்தகங்கள் எடுத்துச் செல்லும் பழக்கம் கொண்டவர்.
படிக்க நேரமில்லை என்றாலும், புத்தகம் எழுதிய ஆசிரியர்கள் என் கூட இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் என்கிறார். உள்ளத்தால் உயர்ந்தவர் என காமராஜரையும், நான் சாதாரணமான பிரதமர், நீங்களோ இசை உலக அரசி என எம்.எஸ்.சுப்புலட்சுமியையும் பாராட்டியவர். நேரு குறித்து, சுவாரசியமான நிகழ்வுகளை அறிய விரும்புகிறவர்கள் வாசிக்க வேண்டிய நுால்.
–
டி.எஸ்.ராயன்