கடவுளைப் பொறுத்தவரை தன்னை நம்பியவர், நம்பாதவர் என்ற வேறுபாடு இல்லாமல் அருள் புரிவது இயற்கை. ஆனால், மனிதர்களிலும் அப்படி ஒருவர் இருந்திருக்கிறார் என்றால் அது ஆச்சரியம் தானே.
‘நம்பினார் கைவிடப்படார்’ என்ற வாக்கிற்கிணங்க, நடமாடும் தெய்வமாக விளங்கிய மகா பெரியவாள் நடத்திய அற்புதங்கள், சொல்லிலோ எழுத்திலோ அடங்காது. பக்தர்களின் கஷ்ட நஷ்டங்களை அவர்கள் சொல்லாமலேயே அறிந்து, தீர்ப்பதற்கு வழிகாட்டிய சில சம்பவங்கள் இந்த நுாலில் விவரிக்கப்பட்டுள்ளன.
மகா பெரியவாளை நேரில் சந்திக்காத பக்தையின் துயரையும் துடைத்த சம்பவம் மனதை நெகிழச் செய்கிறது. ஆன்மிகத்தில் நம்பிக்கை உள்ள அனைவரும் படித்து பயன் பெற வேண்டிய நுால் இது.
– இளங்கோவன்