கவிஞர், வசனகர்த்தா, எழுத்தாளர், அரசியல்வாதி, பேச்சாளர், சிறந்த நிர்வாகி என பன்முகம் கொண்ட மறைந்த கருணாநிதி, அரசியலில் பின்னிப் பிணைந்த தருணத்தை கூறும் நுால். திருவாரூரில் பிறந்தது முதல், சென்னை மெரினாவில் அடக்கம் செய்யப்பட்டது வரை, 39 தலைப்புகளில் பேசுகிறது.
முதல் தேர்தல், ஆட்சி நிர்வாகம், மொழிப்பற்று, மாநில சுயாட்சி கொள்கை என அரசியல் பிரவேசத்தை பேசுகிறது. அண்ணாதுரை இறுதி நாட்களில் நடந்தவை, பின் தலைமை மாற்றம் என சாதுர்ய நிர்வாகத் திறனை விவரிக்கிறது.
கட்சியில் ஏற்பட்ட பிளவு, தொண்டர்களுக்கு கடிதம், நெருக்கடி கால அனுபவங்களையும் சொல்கிறது. முதல்வர் பதவி, தொழில் வளர்ச்சி, பொருளாதார மேம்பாடு என பலவற்றையும் பட்டியலிடும் நுால்.
– டி.எஸ்.ராயன்