மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்ட பிரமாண்டமான சக்திகள் பற்றி விரிவாக விளக்கப்பட்டுள்ள நுால். ‘ஜின்’ என்ற அசுர வகை தேவதை, காட்டேரி அம்மன், யட்சினிகள், சுடலைமாடன், விஷ்ணுமாயா சுவாமி என, பல மாநிலங்களில் உள்ள அசுர சக்திகள் பட்டியலிடப்பட்டு உள்ளன.
தாந்த்ரீக வழிபாடு, ஆகம வழிபாடு, வைதீக வழிபாடு ஆகியவை விளக்கப்பட்டுள்ளன. அஷ்ட கர்மா எனப்படும் எட்டு வினைகளை, இறைவன் அருளிய ஐம்பெரும் சக்திகளான ஐந்தெழுத்து மந்திரத்தால் செய்ய முடியும் என விளக்கப்பட்டுள்ளது.
அரவிந்தர், பாம்பன் சுவாமிகள் போன்ற ஞானிகள் வாழ்வில் அசுர சக்தியைப் பெற்றமையும், அதனால் நடந்த அற்புதங்கள் பற்றியும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மகோன்னத நிலையை அடைய விழைபவர்களுக்குப் பயன்படும் நுால்.
– புலவர் சு. மதியழகன்