உலகில் தோன்றும் கடவுள் அல்லது கடவுளின் துாதர்கள் சித்தர்கள், மாமுனிவர்கள், மகான்கள், சத்குருக்கள் என வழங்கும் நுால்.
கடவுளைக் காண வேண்டும் என்ற ஆவலால், பூஜை செய்து வழிபாடு நடத்துபவர்களை பக்தர்கள் என்றும், கடவுளைக் கண்டு தெளிவு பெற்றவர்கள் சித்தர்கள் என்றும் கூறுகிறார், தேவாரம் இயற்றிய திருநாவுக்கரசர்.
கடவுளைக் கண்ட சித்தர்கள் அழியாத உடலைப் பெற்றவர்கள். பிரபஞ்சத்தின் ஐம்பூதங்களையும், எண் சாண் உடலில் அடக்கி, விண்ணுலகும் வியக்கும் வகையில் ஆற்றல் பெற்றவர்கள் சித்தர்கள். அந்த வழியில் பட்டினத்தாரின் முழுமையான வரலாற்றையும், அவர் தம் பாடல்களையும் முழுமையாக கொண்டு அமைந்த நுால்.
– முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்