பனை ஓலை, பழந்தமிழ், பெண்ணியம், சங்கப்பாடல்கள் என பரந்து விரியும் நுால். தமிழ்ப்படைப்புகள், வரலாற்றுப் பதிவுகள் போன்றவற்றை பதிவு செய்ய பனை ஓலைகள் தான் முதன்மைப்பொருள். தமிழ் இலக்கியங்களை உயிர்ப்புடன் வைத்திருந்ததில் முக்கியப் பங்கு பனை ஓலைக்கு உண்டு. என்பது போன்ற கருத்துக்களைப் பதிவு செய்கிறது.
நாட்டார் வழக்காற்றியலின் கூறுகளும் இடம்பெற்றுள்ளன. பாத்திரம் போலான பனையோலை மடலில், பதநீர் போல் கவிதை வரிகளும், நுங்குச் சுளைகள் போல் கருத்துரைகளும் இடம் பெற்றுள்ளன. பனையின் சிறப்புகளைப் பதிவிட்டுள்ள நுால்.
– முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்