பனைத் தொழில் செய்தவரின் வாழ்க்கை சார்ந்து எழுதப்பட்டுள்ள நாவல். அரபு நாட்டில் பணம் சேர்க்கலாம் என்று, தென்மாவட்டங்களில் பலர் செல்லும் வழக்கம் உள்ளது. அது போன்ற பாத்திர அமைப்பை கொண்டுள்ளது.
ஓமன் நாட்டுக்குச் செல்கிறார் ரங்கன். அவரதுவாழ்வு நிகழ்வு பற்றி பின்னோக்கு உத்தியில் அமைக்கப்பட்டுள்ள நாவல். ஏழு கடல் தாண்டி சென்று பணம் சேர்க்கும் பயணத்தை விவரிக்கிறது.
எழுத்து நடை, வாசிப்பதற்கு இதமான மனநிலையை அமைத்துத் தருகிறது. நிஜக்கதை போல் அமைந்திருக்கிறது. வாசிக்கும்போது கதையுடன் இணைந்து பயணிக்கும் அனுபவத்தை தருகிறது. அலி, ரங்கன் என்ற பாத்திரங்கள் முக்கியமானவை. அவை, நாவல் முழுதும் ஓமன் நாட்டில் உலா வருகின்றன.
எப்படியெல்லாம் உதவி செய்து வாழ வேண்டும் என்ற உணர்வை வெளிப்படுத்தும் பாத்திரங்களாக உள்ளன. வங்கக் கடற்கரையில் உள்ள உவரி கிராம பனை மரம் ஏறும் தொழிலில் துவங்கி, மேற்காசியாவில் உள்ள ஓமன் ஈச்சம்பனை வரை இழுத்துச் செல்லும் நாவல்.
– முகிலை ராசபாண்டியன்