காதல், திருமணம், குடும்ப உறவு, அதில் ஏற்படும் விரிசல், அதையும் மீறிய பாசப் போராட்டத்தை விவரிக்கும் வகையில் அமைந்துள்ள நாவல். ஆசிரியை பணிக்காக படித்து, வேலை கிடைக்காத விரக்தியில், வயல் வேலைக்கு செல்லும் பெண்ணை சுற்றி படர்கிறது.
வயல் கிணற்றில் சந்தித்தவருடன் பெண்ணுக்கு காதல் ஏற்படுகிறது. குடும்பத்தினர் அவருக்கு வேறு பெண்ணை நிச்சயதார்த்தம் செய்கின்றனர். குடும்ப வற்புறுத்தலால் முடிவு எடுக்க முடியாமல் போராட்டத்தில் தவிக்கிறார்.
குடும்ப உறவில் காதல் என்ற அன்பு பாயும்போது, எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தும் என விவரிக்கிறது. எளிய மொழிநடையில், கிராமிய மணத்துடன் சோர்வு இல்லாமல் வாசிப்பை சுவாரசியப்படுத்தும் நாவல்.
– டி.எஸ்.ராயன்