அறிவியல் வளர்ச்சி அடிப்படையில் அடைந்த கண்டுபிடிப்புகள் சார்ந்து கருத்து தெரிவிக்கும் நுால். உலக தோற்றம் பற்றிய அறிவியல் சிந்தனையின் வெளிப்பாடாக அமைந்து உள்ளது. புதிய வழியில் பிரபஞ்சம் பற்றிய கருத்துகளை கூறுகிறது. எட்டு கட்டுரைகள் உள்ளன. நிலையற்ற தன்மை என துவங்குகிறது.
அடுத்து, பொருளும் சக்தியும், மகா சுழற்சி, சூன்ய கோட்பாடு, உருண்டை வடிவம், பிளாக் ஹோல்களின் உஷ்ண நிலை, 24 மணி நேர சுழற்சியை பாதிக்கும் நிகழ்வுகள், காலத்தின் போக்கும் இயற்கையின் மாற்றங்களும் என்ற தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளன.
அறிவியல் பார்வையை உள்வாங்கி, தனித்துவ சிந்தனையை வெளிப்படுத்தும் நுால்.
– ராம்