சிறு தொழில் துவங்க கிடைக்கும் கடன் வசதி பற்றிய விபரங்களை தொகுத்து தரும் நுால். சிறு, குறு, நடுத்தர தொழில் துவங்க நினைப்போர், நிதி திரட்ட திட்டமிடும் போது ஆலோசனை தரும் வகையில் எழுதப்பட்டுள்ளது.
தவணைக் கடன், நடைமுறை மூலதானக்கடன், மாற்று பில் வாங்குதல், ஏற்றுமதிக்கான வங்கிக் கடன், சிறு குறு தொழில் சொத்து பத்திர அடமானம், வங்கிக் கடனுக்கான உத்தரவாதம் என புரியும் படி தலைப்பு அமைத்து தொகுத்து தரப்பட்டுள்ளது.
முத்ரா கடன், புதிய தொழில் முனைவோருக்கு உதவும் நிதி சேவைகள், தேசிய சிறு தொழில் நிறுவனங்கள் வழங்கும் சேவை, சிறு தொழில் வளர்ச்சி வங்கி வழங்கும் சேவை என தகவல்களை பட்டியலிட்டு தருகிறது. தொழில் துவங்க விரும்புவோருக்கு வழிகாட்டியாக அமையும் நுால்.
– ராம்