உடல் நலத்தோடு வாழவும், கோபம் இல்லா உயர்நிலையைப் பெறவும், அன்பு செலுத்தும் நல்லறிவைப் பெறவும் வழிகாட்டியாக விளங்கும் நுால். தெய்வ வழிபாடு, கோவில் சிறப்புகள், நவராத்திரி சிறப்புகள் போன்றவற்றோடு நல்வாழ்வு வாழ, நல்ல பண்பு நலன்களும் சுட்டப்பட்டுள்ளன.
புரி ஜெகன்னாதர் ரத யாத்திரை, சங்கரன்கோவில், வீரபாண்டி கவுமாரியம்மன், தென்னேரி கந்தளீஸ்வரர், உறையூர் வெக்காளியம்மன், நவபாஷாணா நவக்கிரக கோவில் சிறப்புகளும் நடைபெறும் வழிபாடுகளும் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.
நற்பண்புகளும், நல்லறங்களும், சுற்றுப்புற துாய்மை பற்றிய விழிப்புணர்வும், மூலிகைகளின் மருத்துவ குணங்களும் கூறப்பட்டுள்ளன. நிறைவு பகுதியில் கர்ம காண்டம், உபாஸனா காண்டம், ஞான காண்டம் என்ற பிரிவுகளில் நால்வகை வேதங்களின் சுருக்கமான விளக்கம் இடம் பெற்றுள்ளது. பக்தியோடு நல்வாழ்வு வாழ வழிகாட்டும் நுால்.
– புலவர் சு.மதியழகன்