கட்டுமான தொழிலில் கொடிகட்டி பறக்கும் பெண்ணான ஜெயலட்சுமியை சுற்றி நடக்கும் சம்பவங்களாக பின்னப்பட்டுள்ள நாவல். காவல் துணை ஆணையர் கொலையில் சம்பந்தப்பட்ட இந்த பெண்ணை விடுதலை செய்கிறது நீதிமன்றம். மேல் முறையீட்டில் தண்டனை வாங்கி தருவேன் என கங்கணம் கட்டும் காவல் ஆணையரின் நடவடிக்கை என, சுவாரசியத்துடன் விரிகிறது.
அடுத்தடுத்த கொலைகள் ஏன் நடக்கிறது, இதில் பெண்ணின் பங்கு என்ன, இவருக்கு வைத்த குறியில் நாய் பலியாவது, பழிவாங்கலுக்கு காரணம் என்ன, இறுதி தீர்ப்பு யாருக்கு சாதகத்தை வழங்கியது குறித்து அலசுகிறது.
கொலை செய்ய பயன்படுத்தும் ஒவ்வொரு தோட்டாவும், நீதிமன்ற சாட்சியாக மாறுகிறது. தற்கொலை, ஆதாரங்களால் எப்படி கொலையாக மாறுகிறது என ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறது. துரோகம், காழ்ப்புணர்ச்சி, வன்மம், பழிவாங்கல், பதற்றம், பயம், பாசம், உறவு போன்ற உணர்வுகளை பிரதிபலிக்கும் நாவல்.
– டி.எஸ்.ராயன்