தெனாலிராமன் பிறந்ததாக கூறப்படும் தெனாலி, வாழ்ந்த விஜயநகர பகுதிகளில் செவி வழியாக கேட்ட கதைகளை வடித்து தரும் நுால். கடைசிக் கதை தெனாலிராமன் பாம்பு தீண்டி மாண்டதை சொல்கிறது. மற்றவை சிரிப்பு கொத்துக்கள்.
தெனாலிராமனை கொலை செய்ய உத்தரவு பிறப்பித்தான் மன்னன். கொலைக்களத்துக்கு கூட்டிச் சென்ற காவலருக்கு லஞ்சம் கொடுத்து தப்பித்து விடுகிறான். அந்தக் காலத்திலேயே லஞ்சம் இருந்ததை சுட்டிக்காட்டுகிறது. மயானத்தில் பூஜை போடும்போது ஏற்பட்ட ஒரு வேடிக்கை கதையாக பதிவாகியுள்ளது.
தன் நாடு வளம் பெறாவிட்டாலும், அடுத்த நாடு சுபிட்சம் அடையக்கூடாது என்று வஞ்சமுடன் செயல்பட்டான் மன்னன். தெனாலிராமன் முறியடிப்பதை, சாவிலே வாழ்வு என்ற கதை காட்டுகிறது. இளையவர் உலகமும், முதியவர் உலகமும் வரவேற்கும் கதைகளின் தொகுப்பு நுால்.
– சீத்தலைச் சாத்தன்